Notation Scheme

காமாக்ஷி அனுதி3னமு - ராகம் பைரவி - kAmAkshi anudinamu-bhairavi

English Version
Language Version

பல்லவி
1காமாக்ஷி அனுதி3னமு மரவகனே நீ
2பாத3முலே தி3(க்க)னுசு நம்மிதினி ஸ்ரீ கஞ்சி (காமாக்ஷி)

ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
குந்த3 ரத3னா குவலய நயனா
தல்லி 3ரக்ஷிஞ்சு (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய 2
கம்பு33ள நீரத3 சிகுரா விது4
வத3னா மா(ய)ம்மா (காமாக்ஷி)
ஸ்வர ஸாஹித்ய 3
கும்ப4 குச மத3 மத்த க3ஜ க3
பத்3ம ப4வ ஹரி ஸ1ம்பு4 நுத பதா3
1ங்கரீ நீவு நா 4சிந்தல வேவேக3
5தீ3ர்(ச)ம்மா(வி)புடு3 (காமாக்ஷி)
ஸ்வர ஸாஹித்ய 4
4க்த ஜன கல்ப லதிகா
கரு(ணா)லயா ஸத3யா கி3ரி தனயா
காவவே ஸ1ர(ணா)க3துடு33தா3
தாமஸமு ஸேயக வர(மொ)ஸகு3 (காமாக்ஷி)
ஸ்வர ஸாஹித்ய 5
பாதகமுலனு தீ3ர்சி நீ பத3
4க்தி ஸந்தத(மீ)யவே
6பாவனி க3தா3 மொர வினவா
பரா(கே)ல(ன)ம்மா வி(ன)ம்மா (காமாக்ஷி)
ஸ்வர ஸாஹித்ய 6
7து3ரித ஹாரிணி ஸதா3 நத ப2
தா3யகி(ய)னி பி3ருது3 பு4விலோ
3லிகி3ன தொ3ர(ய)னுசு
8வேத3முலு 9மொர(லி)ட33னு (காமாக்ஷி)
ஸ்வர ஸாஹித்ய 7
10நீப வன நிலயா ஸுர ஸமுத3யா
11கர வித்4ரு2த குவலயா மத3
3னுஜ வாரண 12ம்ரு2(கே3)ந்த்3(ரா)ஸ்1ரித
13கலுஷ த3மன4னா
அபரிமித வைப4வமு க3ல நீ ஸ்மரண
மதி3லோ த3லசின ஜ(னா)து3லகு
3ஹு ஸம்பத3ல(னி)ச்சே(வி)புடு3
14மா(க)ப4ய(மி)ய்யவே (காமாக்ஷி)
ஸ்வர ஸாஹித்ய 8
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸஹோத3ரீ ஸி1
1ங்கரீ பர(மே)ஸ்1வரீ
ஹரி ஹ(ரா)து3லகு நீ 15மஹிமலு
3ணிம்ப
தரமா ஸுது(ட3)ம்மா
அபி4மானமு லேதா3 நாபை தே3வீ
பரா(கே)லனே ப்3ரோவவே இபுடு3 ஸ்ரீ பை4ரவீ (காமாக்ஷி)


பொருள் - சுருக்கம்

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காமாக்ஷி/ அனுதி3னமு/ மரவகனே/ நீ/
காமாட்சீ/ அனுதினமும்/ மறவாது/ உனது/

பாத3முலே/ தி3க்கு/-அனுசு/ நம்மிதினி/ ஸ்ரீ/ கஞ்சி/ (காமாக்ஷி)
திருவடிகளே/ புகல்/ என/ நம்பினேன்/ ஸ்ரீ/ காஞ்சி/ (காமாட்சீ)


ஸ்வர ஸாஹித்ய
ஸ்வர ஸாஹித்ய 1
குந்த3/ ரத3னா/ குவலய/ நயனா/
முல்லை/ பல்லினளே/ கமல/ கண்ணீ/

தல்லி/ ரக்ஷிஞ்சு/ (காமாக்ஷி)
தாயே/ காப்பாய்/


ஸ்வர ஸாஹித்ய 2
கம்பு3/ க3ள/ நீரத3/ சிகுரா/ விது4/
சங்கு/ கழுத்தினளே/ கார்/ குழலியே/ மதி/

வத3னா/ மா/-அம்மா/ (காமாக்ஷி)
முகத்தினளே/ எமது/ அம்மா/
ஸ்வர ஸாஹித்ய 3
கும்ப4/ குச/ மத3/ மத்த/ க3ஜ/ க3ம/
கும்ப/ முலையாளே/ மதம்/ கொண்ட/ களிறு/ நடையாளே/

பத்3ம ப4வ/ ஹரி/ ஸ1ம்பு4/ நுத/ பதா3/
மலரோன்/ அரி/ சம்பு/ போற்றும்/ திருவடியினளே/

1ங்கரீ/ நீவு/ நா/ சிந்தல/ வேவேக3/
சங்கரீ/ நீ/ எனது/ கவலைகளை/ வெகு வேகமாக/

தீ3ர்சு/-அம்மா/-இபுடு3/ (காமாக்ஷி)
தீர்ப்பாய்/ அம்மா/ இவ்வமயம்/
ஸ்வர ஸாஹித்ய 4
4க்த ஜன/ கல்ப/ லதிகா/
அடியார்களின்/ கற்பக/ கொடியே/

கருணா/-ஆலயா/ ஸத3யா/ கி3ரி/ தனயா/
கருணையின்/ ஆலயமே/ தயையுடையவளே/ மலை/ மகளே/

காவவே/ ஸ1ரணு/-ஆக3துடு3/ க3தா3/
காப்பாயம்மா/ சரண்/ அடைந்தவன்/ அன்றோ/

தாமஸமு/ ஸேயக/ வரமு/-ஒஸகு3/ (காமாக்ஷி)
தாமதம்/ செய்யாது/ வரம்/ அருள்வாய்/
ஸ்வர ஸாஹித்ய 5
பாதகமுலனு/ தீ3ர்சி/ நீ/ பத3/
பாதகங்களை/ தீர்த்து/ உனது/ திருவடி/

4க்தி/ ஸந்ததமு/-ஈயவே/
பற்றினை/ என்றென்றைக்கும்/ அருளம்மா/

பாவனி/ க3தா3/ மொர/ வினவா/
புனிதமாக்குபவள்/ அன்றோ/ முறையீட்டினை/ கேளாயோ/

பராகு/-ஏலனு/-அம்மா/ வினு/-அம்மா/ (காமாக்ஷி)
பராக்கு/ ஏன்/ அம்மா/ கேள்/ அம்மா/
ஸ்வர ஸாஹித்ய 6
து3ரித/ ஹாரிணி/ ஸதா3/ நத/ ப2ல/
பாவங்களை/ களைபவளே/ 'எவ்வமயமும்/ பணிந்தோருக்கு/ பயன்/

தா3யகி/-அனி/ பி3ருது3/ பு4விலோ/
அருள்பவள்/ எனும்/ விருது/ புவியினில்/

3லிகி3ன/ தொ3ர/-அனுசு/
உடைய/ துரை/ யென/

வேத3முலு/ மொரலு/-இட33னு/ (காமாக்ஷி)
மறைகள்/ முறை/ யிட/ (காமாட்சீ)
ஸ்வர ஸாஹித்ய 7
நீப/ வன/ நிலயா/ ஸுர/ ஸமுத3யா/
கதம்ப/ வனத்தினில்/ உறைபவளே/ வானோர்/ குழுமத்தினளே/

கர/ வித்4ரு2த/ குவலயா/ மத3/
கரத்தினில்/ ஏந்துபவளே/ கமலம்/ செருக்குடைய/

3னுஜ/ வாரண/ ம்ரு23/-இந்த்3ர/-ஆஸ்1ரித/
அசுரர் (எனும்)/ வாரணங்களுக்கு/ விலங்கு/ அரசே/ அண்டியோரின்/

கலுஷ/ த3மன/ க4னா/
மாசுகளை/ போக்கும்/ பெருந்தகையே/

அபரிமித/ வைப4வமு/ க3ல/ நீ/ ஸ்மரண/
எல்லையற்ற/ வைபவங்கள்/ உடைய/ உனது/ நினைவினை/

மதி3லோ/ த3லசின/ ஜன-ஆது3லகு/
(தமது) உள்ளத்தில்/ நினைக்கும்/ மக்களுக்கு/

3ஹு/ ஸம்பத3லனு/-இச்சேவு/-இபுடு3/
மிக்கு/ செழிப்புகளை/ தருகின்றாய்/ இவ்வமயம்/

மாகு/-அப4யமு/-இய்யவே/ (காமாக்ஷி)
எமக்கு/ அபயம்/ அளிப்பாயம்மா/
ஸ்வர ஸாஹித்ய 8
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ஸி1வ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ சிவ/

1ங்கரீ/ பரம-ஈஸ்1வரீ/
சங்கரீ/ பரமேசுவரீ/

ஹரி/ ஹர/-ஆது3லகு/ நீ/ மஹிமலு/
அரி/ அரன்/ ஆகியோருக்கும்/ உனது/ மகிமைகளை/

3ணிம்ப/ தரமா/ ஸுதுடு3/-அம்மா/
கணக்கிட/ தரமா/ (உனது) மகவு/ அம்மா/

அபி4மானமு/ லேதா3/ நாபை/ தே3வீ/
அன்பு/ இல்லையா/ என்மீது/ தேவீ/

பராகு/-ஏலனே/ ப்3ரோவவே/ இபுடு3/ ஸ்ரீ/ பை4ரவீ/ (காமாக்ஷி)
பராக்கு/ ஏனம்மா/ காப்பாயம்மா/ இவ்வமயம்/ ஸ்ரீ/ பைரவீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - காமாக்ஷி - காமாக்ஷீ.
2 - பாத3முலே - பாத3முல.
3 - ரக்ஷிஞ்சு - ரக்ஷிம்ப.
4 - சிந்தல - சிந்தலு.
5 - தீ3ர்சம்மாவிபுடு3 - தீ3ர்சம்மா வினம்மா.
6 - பாவனி க3தா3 மொர வினவா - பாவனீ க3தா3 மொர வினதா.
7 - து3ரித ஹாரிணி - கலுஷ ஹாரிணி.
Top
8 - வேத3முலு - வேத3மு.
9 - மொரலிட33னு - மொரலிட33 வினி.
12 - ம்ரு2கே3ந்த்3ராஸ்1ரித - ம்ரு2கே3ந்த்3ரார்சித : இவ்விடத்தில் 'அர்சித' என்பது பொருந்தாது.
13 - கலுஷ த3மன - கலுஷ த3ஹன.
14 - மாகப4யமிய்யவே - மாகப4யமீயவே.
15 - மஹிமலு க3ணிம்ப - மஹிமலு வினிம்ப.
Top

மேற்கோள்கள்
10 - நீப வன நிலயா - கதம்ப வனத்தில் உறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில் (60), அம்மையின் பெயர், 'கதம்ப வன வாஸினி' என்பதாகும். ஸௌந்தர்ய லஹரி (8) - 'நீப உபவனவதி' நோக்கவும்.

11 - கர வித்4ரு2த குவலயா - கரத்தில் கமலம் ஏந்துபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில் (11), அம்மையின் பெயர் - 'பஞ்ச தன்மாத்ர ஸாயகா' - 'ஐம்பொறிகளெனும், (மலர்) அம்புகளுடையாள்' என்பதாகும். இவ்வைந்து மலர்களில், 'கமலம்' ஒன்றாகும்.
Top

விளக்கம்
சம்பு - சிவன்
கற்பகக் கொடி - விரும்பியதருளும் வானோர் தரு.
பாதகங்கள் - கொடிய பாவங்கள்
மறைகள் முறையிட - மறைகள் பறைசாற்ற என
விலங்கரசு - சிங்கம்
Top